ஏப்ரல் 8,9-ஆம் தேதிகள் வரையிலான 4 நாட்கள் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர் மேன் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தமிழக மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் தந்துள்ளது.
மழை பெய்ய வாய்ப்பு – வெதர் மேன்..!
விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மழை பெய்துள்ளது. ஏப்ரல் 5 ம் தேதி முதல் 10 ம் தேதி வரையில் தென் தமிழகம் மற்றும் உள்தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும். கன்னியாகுமரி, நெல்லை, வால்பாறை சரக பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 5 நாட்களில் அதிகபட்சமாக 35 மிமீ வரை மழை பதிவாகும்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் அமைந்த தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கடலோர பகுதியான கன்னியாகுமரியில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மித அளவிலான மழை பெய்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
Bolt On Gaming Power Players! Breaking News On: PlayStation, Xbox, Nintendo, PC and More!
No comments:
Post a Comment