ஏப்ரல் 14க்கு பிறகு ரயில், விமான பயணத்திற்கான முன்பதிவு தொடக்கம் – நம்பி டிக்கெட் வாங்கி வைக்கலாமா..? - FutureADDAs

Breaking

FutureADDAs

One Place For All Job Links

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, April 3, 2020

ஏப்ரல் 14க்கு பிறகு ரயில், விமான பயணத்திற்கான முன்பதிவு தொடக்கம் – நம்பி டிக்கெட் வாங்கி வைக்கலாமா..?

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த 21 நாட்களுக்கு (ஏப்ரல் 14 வரை) ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  லாக் டவுன் தேதி முடிந்த பிறகு ஏப்ரல் 15ம் தேதி முதல் ரயில் மற்றும் விமானம் மூலம் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் சேவை தற்போது தொடங்கி உள்ளது.

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..?

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.  எனவே ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சகம் விளக்கம் ஒன்று அளித்தது.  அதில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்பதிவு தொடக்கம்..!

ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அவரவர் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.  மேலும் இந்தியா முழுவதும் ரயில், விமானம் உட்பட அனைத்து விதமான போக்குவரத்துக்கு சேவைகளும் தடை செய்யப்பட்டு உள்ளன.  தற்போது ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ரயில் மற்றும் விமானத்தில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடாமல் ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ, கோ ஏர் போன்ற நிறுவனங்களும் 14ம் தேதிக்கு பிறகான பயணத்திற்கு டிக்கெட் முன்பதிவு சேவையை தொடங்கி விட்டன.  இதனை பல ட்ராவல் ஏஜென்சிகளும் உறுதி செய்துள்ளன.

ரயில்வே துறை விளக்கம்:

முன்பதிவு தொடங்கியது குறித்து தெரிவித்த இந்திய ரயில்வே, இந்த முன்பதிவு முடிவானது தற்போதைய முடிவை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது.  மேலும் அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.  ஒருவேளை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் அதற்கேற்ப முன்பதிவு தேதியில் மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Read More  Latest Police Jobs 2020

Read More Latest Government Jobs 2020

Read More Latest Current Affairs 2020

For Online Test Series Click Here
To Subscribe Youtube Click Here
To Join Whatsapp Click Here
To Join Telegram Channel Click Here


Bolt On Gaming Power Players! Breaking News On: PlayStation, Xbox, Nintendo, PC and More!

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here